
posted 14th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒரு மில்லியன் டொலருடன் மூவர் கிளிநொச்சியில் கைது
கிளிநொச்சியில் 1 மில்லியன் டொலர் அமெரிக்க நாணயத்தாளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (13) வியாழன் இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 3 பேர், இந்த நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளரை சந்தித்து பேசுவதற்காக சென்றுகொண்டிருந்தபோது கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான நாணயத்தாள், அதனுடன் தொடர்புடைய இரண்டு ஆவணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. செப்பு வடிவத்திலான மற்றைய இரண்டு ஆவணங்களை வைத்திருந்தாலே அந்த நாணயத்தாளை மாற்ற முடியும் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
முல்லைத்தீவை சேர்ந்த பிறிதொரு நபர் இந்த நாணயத்தாளை தம்மிடம் தந்து, பணத்தை மாற்றும்படியும், அதன் பின் பணத்தை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென கூறியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.
தனியார் வங்கி முகாமையாளரை அவர்கள் தொடர்பு கொண்டு காசோலையை மாற்றுவது பற்றி பேசியதாகவும், கொண்டு வந்தால் அதனை பார்த்துவிட்டு சொல்வதாக குறிப்பிட்டதாகவும் வங்கி முகாமையாளர் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)