
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளரின் உடமைகள் சேதமாக்கப்பட்டன
ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நேற்று (19) புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வடக்கு ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின்மீது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் பொருட்கள் எரியூட்டப்பட்டன.
இந்த சம்பவத்தை கண்டித்தும் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)