
posted 22nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடக மன்றம் ஸ்தாபிதம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்படும் ஊடக மன்றம், அம்பாறை மாவட்டத்திலும் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்திற்கான ஊடக மன்றத்தை ஸ்தாபிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை 23 ஆம் திகதி (ஞாயிறு) அம்பாறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை நகரிலுள்ள மொண்டிவிருந்தினர் விடுதியில் நாளை ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஆகியோரது தலைமையில் ஊடக மன்ற ஸ்தாபித நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் இந்த ஸ்தாபித நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், இவ்வாறான ஊடக மன்றங்களை நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஸ்தாக்கும் நடவடிக்கைகளை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப்ப பணியக பிரசார மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)