
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இளம் மருத்துவர் நீரில் மூழ்கி பலி
காரைதீவைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.
அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த இ. தக்சிதன் (வயது- 34) என்ற மருத்துவரே இவ்வாறு மரணமடைந்தார்.
கல்முனை ஆதார மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் இ. தக்சிதன் உகந்த மலை முருகன் ஆலயத்துக்குச் சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.
மருத்துவத் துறைக்குத் தெரிவான அம்பாறை காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது- 20) என்ற மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரத்திலிருந்து காரைதீவு மக்கள் மீள்வதற்குள் மருத்துவர் தக்சிதனின் மரணம் நிகழ்ந்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)