
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இன, மத வேறுபாடின்றி செயல்படுகிறார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன, மத வேறுபாடின்றி நாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்துச் செயல்படுகின்றார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களால் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை ஜனாதிபதிதான், கட்டம் கட்டமாக முன்னிலைக்கு கொண்டு வருகிறார். அவர் இன, மத, பிரதேச வேறுபாடின்றி நாடு என்ற ரீதியில் பணியாற்றி வருகிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிறுவனங்களுக்கும் நிர்மாணங்களுக்குமாக சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதன் ஒரு கட்டமாக சமூக சேவை நிறுவனங்களுக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)