
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்து, இந்திய தேர்தல்களின் சமீபத்திய வெற்றி மற்றும் அவர்களின் மும்முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இலங்கைக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்தார். பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
விஜயவாடா நகரில், இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது ஆண்டு நினைவு முத்திரையையும் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)