
posted 11th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய துணை தூதரகத்தால் யாழ்ப்பாணத்தில் யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடந்த ஜூன் 6 ஆம் தேதி இரண்டு யோகா செயல்விளக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
முதல்நிகழ்வு யாழ்ப்பாணம் தலைமைச் செயலக பணிமனையில் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், இரண்டாவது நிகழ்வு தலைமை செயலக கேட்போர் கூடத்தில் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையிலும் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளில் துணைத் தூதுவர் சாய் முரளி, ராம் மகேஷ் வடக்கு மாகாண பிரதம செயலர் எல். இளங்கோவன், உதவி பிரதம செயலர் திருமதி அன்னெட் நிந்துஷா, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பி. வாகீசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலதிக செய்திகள் | Additional News