
posted 19th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
4 இந்திய மீனவர்கள் கைது
காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று முன்தினம் திங்கள் (17) இரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கைதான மீனவர்களை நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)