
posted 8th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
4ம் காலாற்படையின் புதிய கட்டளைத் தளபதி காத்தான்குடிக்கு விஜயம்
24ம் காலாற்படையின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.ஏ.சி. அனில் பெரேரா காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்தார்.
இதன் போது புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.ஏ.சி. அனில் பெரேராவுக்கு சம்மேளன பிரதிநிதிகளால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் சந்திப்பும் இடம் பெற்றது. மேஜர் ஜெனரல் எல்.ஏ.சி. அனில் பெரேராவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவித்தனர்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி உவைஸ் பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயற்பாடுகள் தொடர்பாக விளக்கி கூறினார்
இதில் சம்மேளன செயலாளர் மெளலவி இல்ஹாம் பலாஹி பொருளாளர் இர்பான் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)