
posted 8th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
17ஆம் திகதி ஹஜ் பெருநாள்
துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை வெள்ளிக்கிழமை தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளி வாசல் அறிவித்துள்ளது.
மஃரிப் தொழுகையோடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பிறைக்குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை, ஏனைய முக்கியஸ்தர்களின் மாநாட்டில் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை உறுதிப்படுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் எதிர்வரும் 16ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)