
posted 19th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்
விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
எஸ் தில்லைநாதன்
முள்ளியவளையை சேர்ந்த சிறீஸ்கந்தராசா அரவிந்தன் (வயது - 27) என்பவரே நேற்று முன்தினம் (17) உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
முத்துஐயன்கட்டில் கூலி வேலைக்காக வந்த குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி வேலை முடிந்து வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது இளைஞர் அவரை மோதியுள்ளார்.
இதில் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். அவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)