
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவில் வியாழக்கிழமை (18) இரவு 11. 02 மணிக்கு சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மதவாச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த சிறிய நிலநடுக்கம் பதிவானது. இது 2.3 ரிக்டர் என்ற அளவில் பதிவானதாக தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வீடுகளில் யன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்தன என்று மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறியளவில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)