
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள்
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ். பொது நூலகத்தில் நேற்றுசனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் யாழ். பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா, நூலக ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை youtubeல் பாருங்கள்
யாழ்ப்பாணம் நூலகத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது நேற்று மாலை (01.06) அன்று யாழ் பொதுசன நூலக முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார்.
ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)