
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மோடியின் இலங்கை வருகை ஜெய்சங்கர் கலந்துரையாடுவார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை தொடர்பில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகமான 'தி இந்து'வுக்கு இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை (20) இலங்கை வருகிறார்.
இந்தியாவில் கூட்டணி அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கை வரும் அவர் பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார். இதன்போது, நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கை வருகிறார். இந்தப் பயணம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் - என்றும் அலிசப்ரி தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)