முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வட்டுக்கோட்டை- முதலியார் கோவிலடி கிராமத்தில் முன்பள்ளி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) சிறப்பாக இடம்பெற்றது.

'வெண்கரம்' தன்னார்வ அமைப்பின் "கல்விக்கு கரம் கொடுப்போம்!" எனும் கருத்திட்டத்துக்கமைய அம்பாள் சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சனசமூக நிலையத் தலைவர் செ. நிஷாந்தன் தலைமை தாங்கியிருந்தார். கட்டடத்துக்கான முதல் அடிக்கல்லை மத குருமார்கள் இணைந்து நாட்டிவைத்தனர்.

தொடர்ந்து, "திரண்டால் மிடுக்கு!" எனும் தொனிப்பொருள் கொண்டு முன்பள்ளிகளை அமைத்து வழங்கும் வெண்கரம் அமைப்பின் கருத்திட்டம் வெற்றி இலக்கை எய்த வேண்டும் என்ற நன்நோக்குடன், கல்வியாளர்களின் கரங்களால் கட்டடக் கற்கள் வரிசையிடப்பட்டன. அந்தவகையில்,
யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வெண்கரம் அமைப்பின் முதன்மைச் செயல்பாட்டாளர் மு. கோமகன் உள்ளிட்டோர் அடிக்கற்களை நிலைப்படுத்தினர்.

விசேடமாக, முன்பள்ளிக் கட்டடத்துக்கான நிதியுதவியாக சுமார் 21 இலட்சம் ரூபாயை 'வெண்கரம்' அமைப்பு வழங்கியதுடன், "கல்வியால் நிமிர்வதற்கு கல்லொன்று தாரீர்!" என்கின்ற வெண்கரத்தின் தொனிப்பொருளுக்கு அமைவாக, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் ஆளுக்கொரு கல்லை பெற்று முன்பள்ளிக்கான அருங்கொடையை வழங்கி ஊக்கப்படுத்தினர். இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், சனசமூக நிலையங்களின் நிர்வாகிகள், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)