
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவக் கல்விக்கு முதலாம் இடம் பெற்றமைக்கு வாழ்த்திய றிஷாட் பதுர்தீன்
கல்முனை ஸாஹிரா கல்லுரி மாணவன் ஹிசான் அஹமட் நேற்று வெளியான கல்வி பொது தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின்படி மருத்துவ துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றார்.
அவரது இல்லத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதுர்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞசர் தலைவரும்,றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எய்ட் சமுக சேவை அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா மற்றும். அ.இ.ம.க முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர்மானாப் மற்றும் கட்சியின் உயர்பிட உறுப்பினர் ஜுனைடின் மான்குட்டி அவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ரிஸ்லி முஸ்தபா அவர்கள் மாணவருக்கு மடிகணனி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)