
posted 23rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னாரில் நாய்கள், காகங்கள் மர்மமான முறையில் சாவு
மன்னார் உப்புக்குளம் பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள், காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இவ்வாறு மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் கூறினர்.
மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது வேதனையளிக்கிறது. இந்த நாய்கள் வீட்டிலிருந்து வெளியில் சென்ற நிலையிலே இவ்வாறு உயிரிழப்பு இடம்பெற்று வருகின்றது.
இதுவரை 8 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறித்த நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்ததாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாய்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)