
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மண்டைதீவு படுகொலை நினைவேந்தப்பட்டது
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றைய முன்தினம் (10) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
உயிரிழந்த மீனவர்களின் நினைவாக குருநகரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1986 ஜுன் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேர் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)