
posted 25th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புலம்பெயர்ந்த தொழிலாளர் போக்குவரத்துத் திட்டம்
'ஜெயகமு சிறீ லங்கா அம்பாறை' மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சித் திட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுசரணையுடன் அம்பாறை எச். எம். வீரசிங்க மைதான வளாகத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித் தொடரின் முதற்கட்டமாக வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் 'புலம்பெயர்ந்த தொழிலாளர் போக்குவரத்துத் திட்டம்' நடைபெற்றது. மேலும் சுயதொழில் மேம்பாட்டுக்கான மானியத்தின் முதற்கட்டமாக 19 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
அத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 08 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி புலம்பெயர்ந்த தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 240 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்தொகை , 520 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணப் பைகள், 100 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ச. தொ. ச. வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பான ஆய்வுக்கூடங்களில் அமைச்சர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளையும் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)