
posted 27th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாலமுனை மரண உபகார நிலையத்துக்கு விஜயம் செய்தார் முன்னாள் முதல்வர்
பாலமுனை மரண உபகார நிதியத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் விஜயம் செய்துள்ளார்.
மரண உபகார நிதியத்தின் நிருவாக சபை உறுப்பினர்களின் அழைப்பையேற்று விஜயம் செய்த சிராஸ் மீராசாஹீப் நிதியத்தினுடாக கடந்த காலங்களில் இப்பிராந்தியத்தில் செய்யப்பட்ட பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் எதிர் காலத்தில் நிதியத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.
கல்முனை மாநகர சபையின் முதல்வராக அவர் பதவி வகித்த காலங்களில் அப்பிராந்தியங்களில் செய்த சேவையை பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)