பல்கலைக்கழக பட்டம் பாடையில் - போராட்டத்தில் குதித்த யாழ் பட்டதாரிகள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பல்கலைக்கழக பட்டம் பாடையில் - போராட்டத்தில் குதித்த யாழ் பட்டதாரிகள்

'பட்டம் வீட்டில்; பட்டதாரிகள் நடு வீதியில்' பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி, வேலையில்லாப் பட்டதாரிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

  • 'பட்டம் வீட்டில், பட்டதாரிகள் நடு வீதியில்'
  • 'ஒரே ஒரு பரீட்சையில் பறந்துபோனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம்'
  • 'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்'
  • 'எமக்கான வாழ்க்கையை எப்போது நாம் வாழ்வது'
  • 'படிப்புக்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?'
  • 'எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும்' >'படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?'
  • 'பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?'
  • 'படித்தும் பரதேசிகளாக திரிவதா?'

என போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக பட்டம் பாடையில் - போராட்டத்தில் குதித்த யாழ் பட்டதாரிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 13.12.2025

Varisu - வாரிசு - 13.12.2025

Read More
Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More