
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நெல்லியடியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
கரவெட்டி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றைய தினம் செவ்வாய் மதியம் ஒரு மணியளவில் பாடசாலை அதிபர் திரு. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர். பிரதேச சுகாதாரப் பரிசோதகர் புருஷோத்தமன் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி இருந்தனர்.
இதே வேளை டெங்கு பரவலை கட்டுப்படுத்தும். விழிப்புணர்வு கருத்துக்களை கொண்ட. நகைச்சுவை வடிவிலான கருத்துப் பகிர்வை இரண்டு மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
இதில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)