
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நெடுந்தீவில் கொடூரமாகக் கொலையுண்ட இளைஞர்
இரு குழுக்களிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலில் முடிந்ததில் இளைஞர் ஒருவர் அடித்தும் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று (20) வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு - 7 வட்டாரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த இளைஞருக்கும் அவரை தாக்கிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த இவர்களிடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இது மோதலில் முடிந்தது. இதில், கொலை சந்தேகநபர்கள் இளைஞரை அடித்தும், கூரிய ஆயுதங்களால் குத்தியும் கொன்றனர்.
கொலையில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நெடுந்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)