
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பவானி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இரவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில் இரவு பத்து மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)