
posted 25th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தாய், சிறியதந்தை துன்புறுத்தலால் பொலிஸ் நிலையத்தில் சிறுவன் தஞ்சம்
தனது தாயரும் சிறிய தந்தையும் (தாயின் இரண்டாவது கணவர்) தன்னை அடித்துத் துன்புறுத்துகின்றனர் என்றுகூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிறுவன் ஒருவன் தஞ்சம் புகுந்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த 16 வயதான அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்தார் என்றும், இங்கு எவரையும் தனக்கு தெரியாத நிலையில் நேற்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)