
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தப்பிச் சென்ற கைதியை கைது செய்ய உதவுங்கள் மக்களை கோருகிறது பொலிஸ்
வவுனியா மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதியை கைது செய்ய உதவுமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களை கோரியுள்ளனர்.
தப்பியோடிய கைதி கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தலைமன்னாரில் 9 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
புகைப்படத்திலுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரியும்பட்சத்தில் *071 859 1364* அல்லது *071 859 1370* என்ற தலைமன்னார் பொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது*youtube channel*லிலும் பாருங்கள் - நன்றி.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)