
posted 25th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம்
சம்மாந்துறை பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களின் உரிமை மேம்பாடு, பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமை மீறல், உளவள சார் நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் சம்மந்தமாக துறைசார் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை ஆதார மருத்துவமனையின் உள நல மருத்துவ நிபுணர் கசூன் கடுவல, கிராம உத்தியோகத்தர் எம். எஸ். எம் நளீர், சமூக சேவை பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி ஏ. யூ. பசீல், உளவளதுணை உத்தியோகத்தர் கே. தயாளினி, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான எம். ஐ. எம். ஹரீமா, ஏ. ஜே. குறைசா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார அதிகாரி, வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வறுமைக்குட்பட்ட குடும்பங்களில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த குடும்பத்துக்கு வாழ்வாதார உதவிக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)