
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறந்த சட்டத்தரணியாகி எமது மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம் - மாணவி கீர்த்திகா
வெளியாகிய 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் அவர்கள் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,
எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டிருந்தாலும், நானோ வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது.
எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார்.
இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார்.
ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களைச் செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)