
posted 3rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சந்நிதியான் ஆச்சிரமத்தின் உதவியுடன் அறநெறி பாடசாலை கட்டிடம்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை ஒன்று அமைத்து ஞாயிற்க்கிழமையன்று (02/06/2024) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தின் சிறீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
சீறி சித்திவிநாயகர் அறநெறி பள்ளி மாணவர்கள் பள்ளி தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழவாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சிறீ சித்தி விநாயகர் அறநெறி பள்ளிக் கட்டிட கல்வெட்டினை திரை நீக்கம் செய்து வைத்து கட்டிடத்தையும் நாடா வெட்டி திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் மங்கல சுடர்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், வெங்கல செட்டிக்குளம் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி. கஜேந்திரகுமார், வெங்கல செட்டி குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த மு. சுயேந்திரன் உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை இடம் பெற்றதை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெற்றன.
இந் நகழ்வில் சந்நிதியன் ஆச்சிரம முதல்வர், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், சி. கஜேந்திரகுமார், மற்றும் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த ம. சுஜேந்திரன், கணேசபுரம் கிராம அமைப்புக்களின் நிர்வாகிகள், அறநெறி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)