
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சஜித், அநுர வடக்குக்கு வருகின்றனர்
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழ் மக்களின் ஆதரவை கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஞாயிறுக்கிழமை முதல் வியாழன் வரையாக ஒரு வார காலத்துக்கு வடக்கில் தங்கியிருப்பார் என்று அறிய வருகின்றது. .
இதேவேளை மக்கள் முன்னணி சார்பு ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)