
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம்.நெளபீஸ் கடமையேற்பு
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம்.நெளபீஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் தலைமையில் புதிய ஆணையாளர் வரவேற்கப்பட்டார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஐ.எம்.றிகாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், லகுகல பிரதேச செயலாளர் நவநீதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல். நூருல் ஹுதா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்தே கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரான என்.எம். நெளபீஸ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் நியமிக்கட்பட்டிருக்கிறார்.
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாகவே என்.எம். நெளபீஸ் அவர்கள் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)