
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும்
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.
அவரைக் கல்வி அமைச்சில் சந்தித்து இது பற்றிக் கலந்துரையாடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் உயர் கூட உறுப்பினரும், முன்னாள் கிண்ணியா நகர சபை தலைவருமான சட்டத்தரணி டாக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரிடம் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை மையப்படுத்தி ஏறத்தாழ 30 நிமிடங்கள் வரை அமைச்சரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)