கதிர்காமம் பாதயாத்திரைக்கான திறக்கப்பட்ட காட்டுப்பாதை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கதிர்காமம் பாதயாத்திரைக்கான திறக்கப்பட்ட காட்டுப்பாதை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மரபு ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பூநாடா வெட்டி கானகப் பாதைக்கான கதவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வரலாறு காணாத வகையில் இம்முறை சுமார் 5000 இற்கும் மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து சமய கலாசார முறைப்படி மூன்றாவது தடவையாக கழுகுமலைப் பத்துபாடி கானகப் பாதைக் கதவு திறந்து வைக்கப்படவுள்ளது.

அதிகாலை 5. 30 மணிக்கு உகந்தைமலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவ சிறீ க. கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடத்தி ஆசியுரை வழங்கியதையடுத்து, காலை 7 மணியளவில் குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி. ஜெயராசா (ஜெயா வேல்சாமி) தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் அடியார்கள் தற்போது உகந்தைமலை முருகன் ஆலயத்தில் தங்கியுள்ளனர்.

கதிர்காமம் காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.

உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை.பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12 மைல் தூரத்தில் நாவலடி, பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை, 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு, 8 மைல் தூரத்தில் கட்டகாமம், அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் ஆகும். மொத்தமாக இக் காட்டுப்பாதை 56 மைல்களாகும்.

சுமார் 6 நாட்கள் இந்தக் காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.

இன்று 30 ஆம் திகதி திறக்கப்பட்ட காட்டுப் பாதை ஜூலை 11 ஆம் திகதி மூடப்படுகிறது.

கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜூலை மாதம் 22ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கதிர்காமம் பாதயாத்திரைக்கான திறக்கப்பட்ட காட்டுப்பாதை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)