எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியின் பிரகாரம் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை தெரிவிக்க முடியும். ஜனநாயக நாட்டில் அதற்கான சுதந்திரம் இருக்கின்றது. சட்டத்தின் அடிப்படையில் ஒக்ரோபர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவேண்டும்.

அதற்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு இன்னும் ஆயுட்காலம் இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்.

ஆனால் அதற்கு இடையில் இன்னும் இரண்டு தேர்தல்கள் இருக்கின்றது. ஒன்று மாகாணசபைத் தேர்தல். அது இன்னும் நடைபெறவில்லை. அது நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வருகின்றது. அது பிற்போடப்படுவதற்கு எமது தலைவர்களும் கடந்தகாலத்தில் உடந்தையாக இருந்தார்கள்.

மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டும். அதேபோன்று உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த மாகாணத்தில் வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாகத்தான் எமது இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அரசியல் கொள்கையுடன் நாங்கள் பயணிக்கின்றோம்.

ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு வருடத்திற்கு தேர்தல்களைப் பிற்போடுவது குறித்து பேசியிருக்கின்றார். அது அவருடைய கட்சி சார்ந்த கருத்து என்றார்.

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)