
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது
ஊடகவியலாளரின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின்கீழ் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி - பத்தமேனியிலுள்ள ஊடகவியலாளர் த. பிரதீபனின் வீட்டின்மீது கடந்த வியாழக்கிழமை (13) நள்ளிரவுவேளை இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள், ஓட்டோ மற்றும் வீட்டிலிருந்த பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
கைதானவர்கள் அச்சுவேலி, மாவிட்டபுரம், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)