
posted 29th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உகந்தையில் சிரமதானம்
அம்பாறை, உகந்தை மலை முருகன் ஆலய ஆடிவேல் பெருந்திருவிழாவை முன்னிட்டும், கதிர்காமம் பாதயாத்திரையை ஒட்டியும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உகந்தையில் சிரமதானமொன்றை மேற்கோண்டனர்.
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுல் நாயகி சஜிந்திரனின் வழிகாட்டலில் இந்த ஆண்டிற்கான உகந்தை முருகன் ஆலய சிரமதான நிகழ்வுகள் நிர்வாக உத்தியோகத்தர் த. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பாதயாத்திரை செல்பவர்களால் இயற்கை மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முகமாக "பொலித்தீன் பாவனையைத் தடுத்தல் மற்றும் நீரினை கண்ணியமாக பயன்படுத்துதல் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகள் ஆங்காங்கே பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் காட்சிப்படுத்தப்பட்டன .

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)