
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (17) இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் இப் பண்டிகை கொண்டாட்டங்களால் களைகட்டியிருந்தது. அதேவேளை இம்முறை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும் திடல்களிலும் இடம்பெற்றன.
இத்தொழுகைகளிலும் பிரார்த்தனைகளிலும் பெருமளவான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையினையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் ஹாலிதீன் ஹாபிழ் நடாத்தினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)