
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இனப்பிரச்சினைக்கு தீர்வைக்கு கனடா அரசாங்கம் இலங்கை அரசுடன் பேசவேண்டும்
கனடா நாட்டுத்தூதுவர் இந்துசமயத் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமக்கள் சம காலத்தில் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசந்தர ஞானசம்பந்த பரமாச்சாரியசுவாமிகள்,செஞ்சொற்செல்வர்.கலாநிதி. ஆறு. திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்ர சந்திப்பில்;
இன்றைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடினார். இதன்போது நல்லை ஆதீன முதல்வர் கனடா நாட்டில் வாழும் எம் மக்களைக் கௌரவமாக அங்கு வழிநடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய மூவரும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக கனடா இலங்கை அரசுடன் பேசவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன், கனடா துணைத் தூதரகத்தை வடக்கில் நிறுவி, மக்களுக்கு உதவவேண்டும் எனவும், கனடா தூதுவராலய விசா அலுவலகம் வடக்குப் பகுதியில அமையவேண்டிய அவசியத்தை விளக்கினர். தொடர்ந்து போரில் இறந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையை எடுத்துரைத்தனர் குறித்த விடயங்கள் தொடர்பில் கனடா நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கனடா நாட்டு தூதுவர் உறுயளித்ததாக இந்து சமய குருக்கள் தெரிவித்தார்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)