
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று (18) போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் இன்று (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், தமக்கு விரைவில் தீர்வு கிடைக்காதுவிடின் பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் நேற்று (17) சம்மேளனத்தின் பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் யாழ். கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் சிறீகந்தவேள் புனிதபிரகாஸ் தெரிவித்தவை வருமாறு,
இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறல் எமது கடல் பகுதிகளில் அரங்கேறி வருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதனால் நாளை (இன்று) செவ்வாய்க்கிழமை முற்பகல் மணிக்கு 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளோம்.
ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயல்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)