
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆறு பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலை
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்த்தரை சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
பொலிஸார் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப் பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச் சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை என்னும் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் 6 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த செய்தியினை எமது youtubeசனலிலும் பார்க்கலாம். கிளிக் செய்து பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)