ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்

பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர்களும், அதிபர்களும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் போது, எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு அவர்களால் எவ்வாறு அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என சிந்திக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சேவையிலிருக்கும் சகலரும் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றும், அரசியல் சார்ந்தவர்களே இதில் பங்கெடுத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர் தொழிலுக்கும் களங்கம் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

சிங்கள பாடசாலைகளுக்குள் மாத்திரமே இந்த பணிப் புறக்கணிப்பு காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம், தனியார் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போல நடைப்பெறுவதாகவும் தெரிவித்தார்.

பாடசாலையின் பாதுகாவலர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நேற்று வியாழக் கிழமை (27) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை, தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்றனர்.

அதனையடுத்து தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

இதன்போது கண்டி தலதா மாளிகையில் கலைஞர் அதுல ஹேரத்தினால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசர் மற்றும் அரசியின் சிலைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனையடுத்து தலதா மாளிகையை தரிசிக்க வந்திருந்த பொது மக்களோடும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார்.

அதன்பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

நேற்றைய விசேட உரையின் பின்னர் முதல் முறையாக மகா நாயக்க தேரர்களைச் சந்தித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

அதனையடுத்து கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, சம்பள பிரச்சினைகள் ஏற்படாதவாறு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்று அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தற்போதும் அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாகவும், அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"நான் ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் மல்வத்து விகாரைக்கு வந்திருந்தேன். அதன்போது நீங்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாட்டின் ஆட்சியை நெறிப்படுத்தி இன்று வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அந்த தகவலை உங்களுக்குச் சொல்லவே இன்று இங்கு வந்தேன். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இரண்டு இணக்கப்பாடுகளையும் எட்டியுள்ளோம்.

ஆசிரியர்களுக்கு அடுத்த வருடத்திலிருந்தே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அது குறித்து நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அதேபோல் ஏனைய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 3000 - 17000 வரையிலான சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வருடத்திலும் 10 000 ரூபா சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 13000 - 27000 வரையில் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏனைய அரச ஊழியர்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

இவ்வேளையிலும் தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. சிங்கள பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமே இவ்வாறான தொழிற்சங்கச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். எவ்வாறாயினும் சம்பள விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சரியான முறைமையொன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதோடு, அது குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றார் ஜனாதிபதி.

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)