
posted 24th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கம் நாளை மறுதினம் (26) புதன்கிழமை திட்டமிட்டவாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடும் என்று சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடளாவிய ரீதியில் வரும் புதன்கிழமை (நாளை மறுதினம்) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள், மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உள்வாங்கியுமே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஆகையால், எந்த அச்சமும் இன்றி அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமிடத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் நிச்சயம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)