
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அம்பாறை மாவட்டத்தில் திறக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புப் பணியகங்கள்
சிறுவர், பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பணியகங்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இத் தடுப்புப் பணியகங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்பட சர்வமத தலைவர்கள், மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)