
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அனலைதீவு கடலில் மர்மப்பெட்டி மீட்பு
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர். மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)