
posted 10th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்பாக ஊடக அறிக்கை
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அறிக்கை பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும் அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்டையில் இல்லாமை கடுமையான குறைப்பாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.
குறிப்பாக இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிட்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள் இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம் அதனை அடைவதற்கான மூலதனத்திறன். அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.
மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி தேசிய பாதகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது. தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)