
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்தில் உயிரிழந்த குடும்பப் பெண்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதி பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா (வயது - 45) பாதசாரி கடவையைக் கடக்கும்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் உயிரிழந்தார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தகவலுக்கு அமைய, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)