
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடு
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நடுத்தீவில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடு தனியார் வீடுகள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பொது இடங்கங்கள் போன்றவற்றில் முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் , மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக நிலைய பிரதிநிதிகள், சமுர்த்தி பயனாளிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)