
posted 3rd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
விசம்போல் ஏறிய கோழி இறைச்சி விலை
நாட்டின் வடமேல் மாகாணம் உட்பட மேலும் சில மாவட்டங்களில் மாடுகளுற்கு புதிதாக வைரஸ் நோய் ஒன்று பரவி வருவதனால் மாட்டிறைச்சி விற்பனை பெரும் வீழ்ச்சி கண்டு வருகின்றது.
மாடுகளுக்கு இப்புதிய வைரஸ் நோய் பரவி மாடுகள் இறந்துவரும் நிலையில் மாட்டிறைச்சியினை உண்பதற்கு மக்கள் பெரும் அச்சமடைந்த நிலையில் இருப்பதனால் மாட்டிறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் மாட்டிறைச்சிக்குப் பதிலாக பொது மக்கள் கோழி இறைச்சியினை கூடுதலாக வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதனால் கோழி இறைச்சி விலை நாடளாவிய ரீதியில் திடீரென விசம்போல் ஏறியுள்ளது.
ஏற்கனவே ஒரு கிலோ கோழி இறைச்சி 1200 ரூபா விலையில் விற்கப்பட்டு வந்த போதிலும் தற்சமயம் ஒரு கிலோ 1700 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த இக்கட்டான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோழி வளர்ப்போர் விலையினை உயர்த்தியுள்ளமை உயர்வடைந்த இன்றைய வாழ்க்கைச் செலவினிலே திண்டாடும் மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை கவலைக்குரிய விடயமாகவுள்ளது.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு கோழி இறைச்சி விலையினை மட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)