
posted 7th June 2023

காலஞ்சென்ற அனைவரினதும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் தேனாரத்தின் அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
கட்டுநாயக்கவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற வான் ஒன்றும், திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சிமெந்து ஏற்றிய கொள்கலனும் கித்துல் உதுவ சிங்கப்புர பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கொள்கலன் புரண்டு விழுந்ததுடன் வானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் வானில் பயணித்த கணவன்,மனைவி உயிரிழந்துள்ளனர்.
வானில் பயணித்த ஒருவரும்,கொள்கலன் சாரதியும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் படுகாயடைந்துள்ள ஒருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான முஸ்தபா அலப்தீன், 45 வயதான முஸ்தலின் சுஹய்லா உம்மா ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)