
posted 1st June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 42ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 42ஆம் ஆண்டு நினைவு நிகழ்வானது இன்று (01) வியாழன் காலை 9.30 மணியளவில் யாழ் நூலகத்தில் இடம்பெற்றது.
நூலக எரிப்பு நினைவு கூரலுடன் நூலகத்தின் தோற்றுவாய்க்குக் காரணமான செல்லப்பா மற்றும் நூலக எரிப்பு செய்தியறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறிப்பாக 1981 ஜூன் முதலாம் திகதி கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகமாகக் காணப்பட்ட யாழ்.பொது நூலகத்தில் கிட்டத்தட்ட 97000 நூல்களுக்கு மேல் எரியூட்டப்பட்டன.
நினைவேந்தல் நிகழ்வில் யாழ். மாநகரசபை ஆணையாளர் த. ஜெயசீலன், நூலக ஊழியர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)